முஸ்லிம் என்ற பெயரில் பிறந்தால் மட்டும் சுவர்க்கம் நமக்கு கிடைத்து விடுமா?
As salamu alaikum wa rahmathullahi wa barakathuhu...
???
முகநூலில் வெறுமனே வீணான பதிவுகளை பதிவிட்டு வெறும் பெயரளவிற்கு முஸ்லிம் என்று கூறிக் கொண்டால் அவர்களின் மறுமை நிலை என்ன???
இறைவனின் வேதத்திலிருந்து சில வசனங்கள் ( 4 )
#ஒருவன் #இறை #நம்பிக்கையாளன் #என்பதற்கு #என்ன #அடையாளம்???
அதை நம்மைப் படைத்த இறைவனே கூறுகிறான்...
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ
அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)
وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ
அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
(அல்குர்ஆன் : 23:4)
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபச்சாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ
எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)
فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ
இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ
அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,
(அல்குர்ஆன் : 23:8)
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَۘ
தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)
اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ
இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.
(அல்குர்ஆன் : 23:10)
الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:11)
Comments
Post a Comment